Skip to content

Arupirukkum Pol song lyrics – அறுப்பிருக்கும் போல்

Arupirukkum Pol song lyrics – அறுப்பிருக்கும் போல்

1. அறுப்பிருக்கும் போல்
மகிழ்ந்து பாடுங்கள்;
நம்மை ஆற்றும் நன்மை
இம்முன்னணையிலே
மா சூரியன் அத்தன்மை
விளங்கும் பிள்ளையே
ஆதியந்தமே.
2. தெய்வீக பிள்ளையே
அன்புள்ள இயேசுவே
உம்மால் நான் களிக்க
என் நெஞ்சைத் தேற்றுமேன்
நீர் என்னை ஆதரிக்க
நான் உம்மை அண்டினேன்
என்னைச் சேருமேன்.
3. பிதாவின் தயவும்
குமாரன் பட்சமும்
பாவத்தைக் கழிக்கும்;
நாம் கெட்டோர், திக்கில்லார்
ஆனால் எக்கதிக்கும்
வழியை ஸ்வாமியார்
உண்டு பண்ணினார்.
4. மெய்யாய் மகிழவே
வாழ்வேது, மோட்சமே;
அங்கே வானோர் பாடும்
சங்கீதம் இன்பமே,
ராஜாவின் ஊரில் ஆடும்
மணிகள் ஓசையே
வா, வா, மோட்சமே.