Atho En Nesar song lyrics – அதோ என் நேசர்

Deal Score0
Deal Score0
Atho En Nesar song lyrics  – அதோ என் நேசர்

Atho En Nesar song lyrics – அதோ என் நேசர்

அதோ என் நேசர் (இயேசு) இரத்த வெள்ளத்தில்
தொங்கினார் சிலுவையில்
எந்தன் பாவங்கள் போக்கிடவே

1. பாவமே அறியாதவர்
பாவமே செய்யாதவர்
பாதகன் போல் தொங்கினார்
பாவி என்னை இரட்சித்தார்
வழிந்தோடிய இரத்தங்களால்
வாழ்வு எனக்கு தந்துவிட்டார் – 2

2. என் பாவ சாபங்களால்
நொறுக்கப்பட்டார் இயேசு
நான் செய்த துரோகங்களால்
உடைக்கப்பட்டார் இயேசு
சரீரமெல்லாம் கிழிக்கப்பட்டார்
காயங்களால் கதறி நின்றார் – 2

3. முள்முடி ஏற்றுக் கொண்டார்
கோலினால் அடிக்கப்பட்டார்
கொடூர ஆணிகளால்
கோரமாய் துளைக்கப்பட்டார்
உமிழப்பட்டார் அவர் முகத்தில்
சிதைக்கப்பட்டார் அவர் உடலில் – 2

4. மரித்தார் உயிர்த்தெழுந்தார்
நம்பிக்கை நமக்குத் தந்தார்
வருத்தங்களால் தவிப்போர்
வாருங்கள் இயேசுவிடம்
இயேசுவை அன்றி மீட்பு இல்லை
இயேசுவை அன்றி வாழ்வே இல்லை – 2

Atho En Nesar lyrics songs, Atho En Nesar song lyrics, Atho En Nesar song lyrics – அதோ என் நேசர்,Pr. R. Reegan Gomez

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Christ media
      SongsFire
      Logo