Azhaitha Devan Anbullavar – அழைத்த தேவன் அன்புள்ளவர்

Azhaitha Devan Anbullavar – அழைத்த தேவன் அன்புள்ளவர்

அழைத்த தேவன் அன்புள்ளவர்
அஞ்ச வேண்டாம் கலங்க வேண்டாம் – 2
அல்லேலுயா அல்லேலுயா ஆ லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா ஆ லேலுயா
1. பாலும் தேனும் பெருகி ஓடும்
பரம கானான் சென்றிடுவோம்
தேனிலும் மா இனிமையான
தேவன் நம்மில் இருப்பதாலே
2. மாராவின் கசப்பை மதுரமாக்கி
மகிழ்ச்சியாக நம்மை நடத்திடுவார்
மனதின் பாரம் கவலை மாற்றி
மகிமையில் நம்மை சேர்த்திடுவார்
3. பாடு நெருக்கம் பெருகினாலும்
பயப்படாதே நீ பயப்படாதே
பாரில் தேவன் மாறா ஜீவன்
மகிழ்வார் நம்மில் என்றென்றுமே

Scroll to Top