Salvation Army Tamil Songs

ஆணி முத்தைக் கண்டேனே நான்-Aani Muththai Kandenae Naan

1. ஆணி முத்தைக் கண்டேனே நான்! மகிழ் கொள் உள்ளமே; இரட்சகா உம்மைப் போற்றுவேன், இரட்சண்ய மூர்த்தியே! 2. சர்வ சக்ராதிபதியே! இராஜாதி இராஜாவே! நேர் பாதை காட்டும் தீபமே! நீதியின் ஜோதியே! 3. தேவ சிங்கார வனத்தின் ஜீவ விருட்சமே! பாவத்தை நீக்கும் இரட்சகன் ஷாரோன் ரோஜாப் பூவே! 4. சுவர்க்கத்தின் ஜோதி நாயகா என் திவ்யாமிர்தமே என் ஆதியே என் அந்தமே என் ஜீவனும் நீரே

ஆணி முத்தைக் கண்டேனே நான்-Aani Muththai Kandenae Naan Read More »

Raththanj sinthi Nammai Avar – இரத்தஞ் சிந்தி நம்மை அவர்

பல்லவி இரத்தஞ் சிந்தி நம்மை அவர் முத்தி சேர்க்கப் பிறந்தார் அனுபல்லவி நித்தம் அவரோடு வாழ சத்ய வழி திறந்தார் கர்த்தரே தம் பக்தர் பாவம் மறந்தார் சரணங்கள் 1. மோசத்துக்குள்ளான என்னை இயேசு சுவாமி பார்த்தார்; நாசத்திருந்தோடி வந்த, நீசனையே சேர்த்தார், நேச மீட்பர் பாசமாகக் காத்தார் – இரத்தம் 2. கெஞ்சி வந்த பாவிகட்காய் தஞ்சமாய் நின்றார்; மிஞ்சி மோசஞ் செய்யும் அந்த வஞ்சப் பேயைக் கொன்றார் கொஞ்சமுமே அஞ்சிடாமல் வென்றார்! – இரத்தம்

Raththanj sinthi Nammai Avar – இரத்தஞ் சிந்தி நம்மை அவர் Read More »

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவகுமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்மீட்பரை நம்பி நேசிக்கிறேன்நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன் அன்பு பாராட்டிக் காப்பவராய்எந்தனைத் தாங்கி பூரணமாய்இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் மெய் சமாதானம் ரம்மியமும்தூய தேவாவி வல்லமையும்புண்ணிய நாதர் தந்துவிட்டார்விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார் 1. இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவ குமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் பல்லவி இதென் கெம்பீரம்! இதென்

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden Read More »

பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்-Paavikkavar Kaattina Maa Neasathal

1. பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் சிலுவையில் தொங்கின இயேசு திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார் பெரும் பாவி எனை இரட்சிக்க பல்லவி பெரும் பாவி என்னை இரட்சிக்க (2) திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார் பெரும் பாவி என்னை இரட்சிக்க 2. ஓர் காலமவர் கொடும் பாவிகட்காகச் சொரிந்தாராம் மிகவும் கண்ணீர்! என் செட்டைக்குள் வருவோரை அரவணைப்பேன்; உமக்கோ மனமில்லை யென்றார் – பெரும் 3. உமதற்புத மாநேசம் பாவி எந்தன் கல் இருதயத்தை இளக்க மனஸ்தாபத்தோடு சுவாமி

பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்-Paavikkavar Kaattina Maa Neasathal Read More »

தயாபரா கண்ணோக்குமேன்-Thayapara Kannokumean

1. தயாபரா! கண்ணோக்குமேன்! உம்மாலேயன்றி சாகுவேன்! என் சீரில்லாமை பாருமேன்! என் பாவம் நீக்கையா! பல்லவி என் பாவம் நீக்கையா! என் பாவம் நீக்கையா! உம் இரத்தமே என் கதியே என் பாவம் நீக்கையா! 2. என் பாவ ஸ்திதி அறிவீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர் அசுத்தம் யாவும் போக்குவீர் என் பாவம் நீக்கையா! – என் 3. மெய் பக்தி ஒன்றுமில்லையே! நற்கிரியை வீண் பிரயாசமே! உம் இரத்தத்தினிமித்தமே என் பாவம் நீக்கையா! – என்

தயாபரா கண்ணோக்குமேன்-Thayapara Kannokumean Read More »

Uthithathae Paarai velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான்

பல்லவி உதித்ததே பாராய் – வெளிச்சந்தான் உலகத்தின் ஒளியாய் அனுபல்லவி உதித்ததே உலகினி லோப்பற்ற பேரொளி, அதிசயப் பிரபையை அற்புதமாய் வீசி சரணங்கள் 1. இதயத்தி லிருண்டு – குளிர் மிகக் கதித்துமே மருண்டு, மதிகெட்டு வழி விட்டு மருளுக்குள்ளகப்பட்டு கதியற்ற பாவிகட்குக் கதிர்விட்டு சுடர் விட்டு – உதி 2. பரனடி மறந்து – தமக்குள் உரிமையைத் துறந்து, மரண இருளில் மயங்கித் திரிவோர்க்கு அருணோதயம் போலனாதிச் சுடரொளி – உதி 3. திரிவினை தீர

Uthithathae Paarai velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான் Read More »

பேரன்பர்இயேசு நிற்கிறார் peranbar yesu nirkiraar

பேரன்பர்இயேசு நிற்கிறார் மகா வைத்தியனாக கடாட்சமாகப்  பார்க்கிறார் நல் நாமம் போற்றுவோமே பல்லவி விண்ணில் மேன்மை பெற்றதே மண்ணோர்க் கின்பமாகவே பாடிப்போற்றும் நாமமே இயேசு என்னும் நாமம் உன் பாவம் யாவும் மன்னிப்பேன் அஞ்சாதே என்கிறாரே; சந்தேகங் கொண்டு சோர்வதேன்? மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில் உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே மேன்மை உண்டாவதாக! நேசிக்கிறேன் இயேசு நாமம் நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில் குற்றம் பயம் நீக்கும் நாமம் வேறில்லை இயேசுவே தான்! என் ஆத்மா பூரிப்படையும் அந்நாமம் கேட்கும்போது – விண்ணில்

பேரன்பர்இயேசு நிற்கிறார் peranbar yesu nirkiraar Read More »

Scroll to Top