Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி

Deal Score0
Deal Score0
Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி

புல்லின் நுனியில் பனித்துளி
காத்திருந்த மணித்துளி
வாழ்வில் வந்த பேரொலி
வாழ வைத்த விண்ணொளி
புல்லின் நுனியில் பனித்துளி..

ஹாலேலூயா ஹாலேலூயா
ஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா

விண்ணில் பூத்த தாரகை
பாதை காட்ட வானிலே
ஞானம் கொண்ட மூவரும்
தேடி பணிந்தே தொழுதனர்
புல்லின் நுனியில் பனித்துளி..

ஹாலேலூயா ஹாலேலூயா
ஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா

பெத்லகேம் என்னும் ஊரிலே
சத்திரத்தில் பிறந்திட்டார்
முன்னனையில் பாலனாய்
தேவ மைந்தன் தோன்றினார்
புல்லின் நுனியில் பனித்துளி..

ஹாலேலூயா ஹாலேலூயா
ஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா

மரண பயமும் தீர்ந்ததே
மானிடர் வாழ்வு மலர்ந்ததே
இயேசு உலகில் பிறந்த்ததால்
எல்லையில்லா மகிழ்ச்சியே
புல்லின் நுனியில் பனித்துளி..

ஹாலேலூயா ஹாலேலூயா
ஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா

Ellaiyillah Magizhi tamil Christmas song lyrics

    songsfire
        SongsFire
        Logo