En Ratchaka Neer Ennilae – என் ரக்ஷகா நீர் என்னிலே

En Ratchaka Neer Ennilae – என் ரக்ஷகா நீர் என்னிலே

என் ரக்ஷகா,நீர் என்னிலே
மென்மேலும் விளங்கும்
பொல்லாத சிந்தை நீங்கவே
சகாயம் புரியும்
என் பெலவீனம் தாங்குவீர்
மா வல்ல கர்த்தரால்
சாவிருள் யாவும் நீக்குவீர்
மெய் ஜீவன் ஜோதியால்
துராசாபாசம் நீங்கிடும்
உந்தன் பிரகாசத்தால்
சுத்தாங்க குணம் பிறக்கும்
நல்லாவி அருளால்
மாசற்ற திவ்விய சாயலை
உண்டாக்கியருளும்
என்னில் தெய்வீக மகிமை
மென்மேலும் காண்பியும்
சந்தோஷிப்பித்துத் தாங்குவீர்
ஒப்பற்ற பலத்தால்
என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்
பேரன்பின் ஸ்வாலையாம்
நீர் பெருக, நான் சிறுக
நீர் கிரியை செய்திடும்
மெய் பக்தியில் நான் வளர
கடாட்சித்தருளும்

Scroll to Top