Enakkothaasai Varum எனக்கொத்தாசை வரும்

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்து
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன் — என
மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே — என
என் காலைத் தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
இராப்பகல் உறங்காரே –என
வலப்பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே –என
எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய் —என
Enakkothaasai Varum Parvatham Naeraay
En Kankalai Aereduppaen
1. Vaanamum buumiyum Pataitha
Valla Thaevanitamirunthu
Ennukkadankaa Nanmaikal Varumae
En Kankal Aeretuppaen — En
2. Malaikal Peyarnthakanridinum
Nilaimaari Puviyakanridinum
Maaridumo Avar Kirupai Ennaalum
Aaruthal Enakkavarae — En
3. En Kaalai Thallaada Vottaar
Ennai Kaakkum devan Urankaar
Isravaelai Kaakkum Nal devan
raappakal Urankaarae –En
4. Valppakkathil Nizhal Avarae
Vazhuvaamal Kaappavar Avarae
Suriyan Pakalil Santhiran iravil
Sethapaduthae –En
5. Eththeenkum Ennai Anukaamal
Aathumaavai Kaakkumen devan
Pokkaiyum Varaththaiyum Pathiramaaka
Kaappaarae Ithu Muthalaay –En

Scroll to Top