Skip to content

Enmeetha Ithanai Anbu – என்மீதா இத்தனை அன்பு

Enmeetha Ithanai Anbu – என்மீதா இத்தனை அன்பு | Tamil Christian New Song

என்மீதா இத்தனை அன்பு
வியந்து பார்க்கின்றேன்
விலையேற பெற்ற உந்தன்
இரத்தத்தால் மீட்டீரே

உம் அன்பின் அகலம் நீளம் உயரம் உணர்ந்து கொள்ள செய்தீரே
உதவாத என்னையும் உருவாக்கி மகிழ்ந்தீரே

1. நிந்தைகள் அடைந்தும் அவமானமடைந்தும்
எனக்காக யாவையும் சகித்தீரே..
உமக்கு முன்பாக என்னை வைத்து
சந்தோஷமாக ஏற்றீரே…

2. காரி உமிழ்ந்தும் காயங்கள் பட்டும்
எனக்காக யாவையும் ஏற்றீரே.
உம் அன்பின் உறவில் என்னை சேர்க்க
எனக்காக மரித்தீரே

3. உலகமே என்னை வெறுத்த போதும்
உம் அன்பு என்னை தாங்குதையா
சாம்பலான என் வாழ்வை
சிங்காரமாக மாற்றினீரே