அன்பு மிகும் இரட்சகனே- anbu migum ratchaganey

1. அன்பு மிகும் இரட்சகனே இன்பமுடன் சேர்த்தீ ரென்னை; உன்னதா வுந்தன் முன் எந்தன் மேன்மை யாது மில்லையே! 2. காருமெனை ஆபத்தினில் பாரும் பாதை தனில் விழாமல் தாரும் உந்தன் கிருபை மிக பாரம் மிகும் சோதனையில் 3. கை விடமாட்டேனென்று மெய்யாகவே வாக்களித்தீர்! ஐயா நீர் என்னருகிருக்க நேயா துன்பம் இன்பமாமே

அன்பு மிகும் இரட்சகனே- anbu migum ratchaganey Read More »

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai

1. அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளைவிதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே;அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே பல்லவி அரிக்கட்டோடே அரிக்கட்டோடேசேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே 2. வெயில் நிழலிலும் விதைப்போமே நாமும்குளிர் பனி கூதல் பயப்படாமல்வேலையும் முடிந்து நல்ல பலன் காண்போம்,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே 3. கவலைகள் கண்ணீர் கஷ்ட நஷ்டமேனும்தைரியமாய் விதைப்போம் இயேசுவுக்காக;கண்ணீர் ஓய்ந்த பின்னர் கர்த்தர் நம்மைச் சேர்ப்பார்சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai Read More »

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney

அன்பிற் சிறந்த கிறிஸ் தையனே! இயேசு மெய்யனே! மா தூயனே – திருச்சுதனே! சரணங்கள் 1. உன்னாவியின் பலத்தால் என்னை நிரப்புமேன் துன்மார்க்கன் மனந்தனைத் தூயதா யாக்குமேன்! சன்மார்க்கத்தோடுன் அன்பை நான்பெறச் செய்யுமேன், சத்தியம் நிறைந்த தேவ மைந்தனே, எந்தன் கர்த்தனே பரிசுத்தனே! என தத்தனே! – அன்பிற் 2. மன்னிப் படைந்தாய் என்ற மா தொனிதானே என்னகந்தனில் கேட்க இன்பங்கொண்டேனே; உன் பதிக்கென எந்தன் உள்ளம் தந்தேனே! வந்தென்னை யாளு மெந்தன் பரனே! தேவ சுதனே!

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney Read More »

அன்பரே! நானும்மில் – Anbarey naan ummil

1.அன்பரே! நானும்மில் அன்பு கூருகிறேன் துன்பப்பட்டும் என்னில் நீர் அன்பு கூர்ந்தீரே பல்லவி நேசிக்கிறேன் நானும்மை நேசித்து சேவிப்பேன்! தாசனென் யாவையுமே தாறேன் மீட்பா! 2. உம் தொனி கேட்க நான் என்றும் வாஞ்சிக்கிறேன் உம் சித்தமே செய்ய தினம் ஆசிக்கிறேன்! 3.நானும் சொந்தமதால் உம்மை நேசிக்கிறேன்! நீரென் சொந்தமதால் வேறெதும் ஆசியேன்!

அன்பரே! நானும்மில் – Anbarey naan ummil Read More »

அனுசரிக்க தேவா- Anusarikka deva

1. அனுசரிக்க தேவா அனுதினம் போதியும் என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 2. அன்புடனே சேவிப்பேன் இன்பம் ஈயும் அதுவே என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 3. நீர் சென்ற பாதை செல்ல பார்த்திபா போதித்திடும் என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 4. காட்டுவேன் என் நேசத்தை சாட்சியால் இப்பாருக்கே என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன்

அனுசரிக்க தேவா- Anusarikka deva Read More »

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai

1. அற்புத அன்பின் கதை மீண்டும் சொல்லு இதை ஆச்சரியமான அன்பு நித்யமாய் உணர்த்துது தூதர்கள் களிப்பாய் உரைத்தனர் மேய்ப்பர்கள் வியப்பாய் பெற்றனர் பாவியே இதை நீ நம்பாயோ? அற்புத அன்பின் கதை பல்லவி அற்புதம்! அற்புதம்! ஆச்சரியமான அற்புத அன்பின் கதை 2. அற்புத அன்பின் கதை அப்பால் நீ இருப்பினும் ஆச்சரியமான அன்பு இன்றும் அழைக்கிறது கல்வாரி மேட்டிலிருந்து கீழே தூயநதி மட்டும் லோகம் உருவாகும் போதும் இவ்வன்பின் அழைப்பு உண்டு 3. அற்புத

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai Read More »

அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana oor naal

1. அற்புத அற்புதமான ஓர் நாள் நான் மறவாத நல் நாள் இருளில் நான் அலைந்து போனபின் இரட்சகரை சந்தித்தேன்; என்ன மா இரக்கமான நண்பர். என் தேவையை சந்தித்தார்; நிழலை நீக்கி இருளை அகற்றினார்; இன்பமாய் இதைச் சொல்வேன்! பல்லவி மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று சிலுவையண்டை இயேசு சுகமாக்கினார் இரவை பகலாக்கினார், என் பாவத்தை கழுவினார்; மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று! 2. நான் பிறந்தது தேவ ஆவியால் தெய்வீகக் குடும்பத்தில் கல்வாரி அன்பால்

அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana oor naal Read More »

Scroll to Top