Illathavaigalai irukirathai pol – இல்லாதவைகளை இருக்கிறவை போல் Song lyrics

இல்லாதவைகளை இருக்கிறவை போல்
அழைக்கும் தெய்வம் நீரே – 2
என் தெய்வமே என் இயேசுவே
நீரே போதும் வேறொன்றும் வேண்டாம்

1. வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திர வெளியில் ஆறுகளும்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. எவரையுமே மேன்மைப்படுத்த
எவரையுமே பெலப்படுத்த
உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்.
உம் கரத்தால் எல்லாம் ஆகும்

3. பெலவீனனை பெலப்படுத்த
தரித்திரனை செழிப்பாக்கிட
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

Scroll to Top