Innor Aandu song lyrics – இன்னோர் ஆண்டு

Innor Aandu song lyrics – இன்னோர் ஆண்டு

1. இன்னோர் ஆண்டு முற்றுமாய்
எங்களை மகா அன்பாய்
காத்து வந்தீர் இயேசுவே
உம்மைத் துதி செய்வோமே.
2. நீரே இந்த ஆண்டிலும்
எங்கள் துணையாயிரும்;
எந்தத் துன்பம் தாழ்விலும்
கூடத் தங்கியருளும்.
3. யாரேனும் இவ்வாண்டினில்
சாவின் பள்ளத்தாக்கினில்
செல்லின், உந்தன் கோலாலே
தேற்றும், நல்ல மேய்ப்பரே.
4. நாங்கள் உந்தன் தாசராய்,
தூய்மை பக்தி உள்ளோராய்
சாமட்டும் நிலைக்க நீர்
காத்து கிரீடம் ஈகுவீர்.
5. ஏக கர்த்தராம் நீரே
மன்னர் மன்னன் எனவே,
என்றும் உம்மைப் போற்றுவோம்
உந்தன் வீட்டில் வாழுவோம்.

Scroll to Top