Skip to content

kaalamo selluthae – காலமோ செல்லுதே Dr.D.G.S.Dhinakaran's Most Inspirational Song lyrics

kaalamo selluthae – காலமோ செல்லுதே Dr.D.G.S.Dhinakaran’s Most Inspirational Song lyrics

காலமோ செல்லுதே
வாலிபமும் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வியெல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்

துன்பமெல்லாம் மறைந்துபோம்
இன்னலெல்லாம் மாறிப்போம்
வியாதி எல்லாம் நீங்கி போம்
நாயகன் நம் இயேசுவால்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்

கருணையின் அழைப்பினால்
மரணநேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் கதறிட
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்

வாழ்க்கையை இயேசுவால்
நாட்களை பூரிப்பாய்
ஓட்டத்தை முடிக்க
காத்துகொள் விசுவாசத்தை
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்