Kalanga Mattom Song Lyrics

Kalanga Mattom Song Lyrics

Kalanga Mattom Song Lyrics From the Album Anbin Geethangal Vol 1 Sung By. Daniel Jawahar.

Kalanga Mattom Christian Song Lyrics in Tamil

கலங்க மாட்டோம் நாங்கள் கலங்க மாட்டோம்
கர்த்தரின் நாமத்தில் ஜெயம் எடுப்போம்
என்ன வந்தாலும் எது வந்தாலும்
இயேசுவின் நாமத்தில் கொடியேற்றுவோம்

1. துன்பங்கள் தொல்லைகள் நெருங்கி வந்தாலும்
கண்ணீரின் பள்ளத்தாக்கு குறுக்கே வந்தாலும்
ஏசுவின் கரங்கள் அணைத்து நடத்தும்
எந்நாளும் அவர் நிழல் மறைத்து நடத்தும்

2. எரிகோவின் மதில்கள் எழும்பி நின்றாலும்
எக்காள தொனிகளால் இடித்து நாம் தகர்ப்போம்
சிங்கம் போல் சத்துரு சீறி வந்தாலும்
யூதாவின் சிங்கமாம் இயேசு வருவார்

3. வியாதியும் வருத்தமும் வறுமை வந்தாலும்
வல்லமை தேவன் வெற்றியைத் தருவார்
வருகையில் தேவன் சீக்கிரம் வருவார்
மகிமையில் நம்மையும் சேர்த்துக் கொள்வார்

4. அக்கினி சூளைகள் சூழ்ந்து வந்தாலும்
அக்கினி தேவன் நம் துணையாக வருவார்
அலையும் காற்றும் சீறிப்பாய்ந்தாலும்
அற்புத தேவன் அதிசயம் செய்வார்


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top