Skip to content

Kan Vilithu Kathirukkum – கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன்

Kan Vilithu Kathirukkum – கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன்

கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீ

தேசத்தை காத்திடும் காவல்காரன் நீ
தூங்கிப்போனதேனோ
தளர்ந்து போனதேனோ
எழும்பிடு எழும்பிடு
உன் வல்லமையை தரித்திடு
அயராமல் ஜெபித்திடு
கண்ணுறங்காமல் காத்திரு

எருசலேமின் அலங்கத்தைப்பார்
மகிமையை இழந்த நிலைதனைப்பார்
சீயோனின் வாசல்களில்
ஆனந்தம் ஒழிந்தது பார்

மங்கி எரிந்திடும் காலமல்ல இது
தூங்கி இளைப்பாறும் நேரமல்ல
அனல் கொண்டு நீ எழுந்தால்
காரிருள் நீங்கிடுமே

உலர்ந்த எலும்புகள் உயிரடையும்
ஆதி எழுப்புதல் மீண்டும் வரும்
மாமீட்பர் நம் இயேசுவை
தேசங்கள் அறிந்திடுமே

கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நான்
தேசத்தை காத்திடும் காவல்காரன் நான்
தூங்கிப் போவதில்லை
தளர்ந்து போவதில்லை
எழும்புவேன் எழும்புவேன்
வல்லமையைத் தரித்துக்கொள்வேன்
அயராமல் ஜெபித்திடுவேன்
கண்ணுறங்காமல் காத்திருப்பேன்