Kannuranga Devan Song Lyrics

Kannuranga Devan Song Lyrics

Kannuranga Devan Song Lyrics From Tamil Christian Song Sung By. Daniel Jawahar.

Kannuranga Devan Christian Song Lyrics in Tamil

கண்ணுறங்கா தேவன் கண்மணிபோல் காப்பார்
தாயயைப் போல தேற்றி தினமும் நம்மைக் காப்பார்
எந்தன் உள்ளம் கண்டு என் நாவில் சொல்லை தந்து
அன்பு முத்தம் தந்தார் சொந்தமாக்கிக் கொண்டார்

1. அலை மேதும் நேரம் தாங்கும் நங்கூரம்
இருள் சூழ்ந்த நேரம் இணையில்லா நேசம்
கால்களுக்கு தீபம் பாதைக்கு வெளிச்சம்
நம்மை விட்டு நீங்கா நல்ல பங்கு இயேசுவே

2. துயரங்கள் நீங்கும் ஆறுதல் கூடும்
சூழ்நிலைகள் மாறும் துக்கம் நீங்கிப் போகும்
எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது
கர்த்தரின் மகிமையோ உன்மேல் உதித்தது

3. வேண்டிடும் நேரம் கேட்டிடும் தேவன்
விண்ணப்பிக்கும் முன்பே பதில் தரும் நாதன்
ஆட்கொண்ட நேசர் நான் சேவிக்கும் அரசர்
பணிந்த என் ஆவியை உயிர்ப்பிக்கும் கர்த்தரே

4. வியாதியின் கோரம் நீங்கியே போகும்
இயேசுவின் அன்போ சோகத்தை மாற்றும்
சிலுவையின் நிழலே உன்னத பெலனே
ஆத்தும நேசரே அடைக்கலம் ஆனிரே


#songsfire

Trip.com WW

Scroll to Top