Skip to content

Kirubaiyin Suriya – கிருபையின் சூரியா

Kirubaiyin Suriya – கிருபையின் சூரியா

1. கிருபையின் சூரியா
நித்திய வெளிச்சமான
நீர், பகல் உதிக்கிற
இப்போதெங்கள் மேல் உண்டான
ராவிருள் அனைத்தையும்
நீக்கவும்.
2. ஆதித் தாய் தகப்பனின்
பாவத்தாலே லோகமெங்கும்
மூடின மந்தாரத்தின்
விக்கினங்களுக்கிரங்கும்
ஆ, ஒளி விசுவீரே
இயேசுவே.
3. உமதன்புட பனி
மிகவும் வறட்சியான
நெஞ்சின்மேல் பெய்தருளி,
உமது விளைச்சலான
அடியார் எல்லாரையும்
ஆற்றவும்.
4. உம்முடைய நேசத்தின்
இன்பமாம் அனலைக் காட்டி
எங்கள் கெட்ட மனதின்
துர்க்குணத்தை அத்தால் மாற்றி,
அதைப் புதிதாகவும்
சிஷ்டியும்.
5. இயேசுவே, நான் பாவத்தின்
அவசுத்தத்தை வெறுத்து,
உம்முடைய நீதியின்
வெள்ளை அங்கியை உடுத்து,
அதை இன்றும் என்றைக்கும்
காக்கவும்.
6. நீர் வெளிப்படும் அன்றே
நாங்கள் மா சந்தோஷத்தோடே
மண் படுக்கைகளிலே
நின்றெழுந்திருந்தும்மோடே
சேர்ந்தும்மோடே என்றைக்கும்
தங்கவும்.
7. அழுகையின் பள்ளத்தை
தாண்டி பரம கதிக்கு
போக நீரே எங்களை
கூட்டிக்கொள்ளும்; அவ்வழிக்கு
நீரே எங்கள் ஜோதியும்
ஆகவும்.