Kuyavanae Kuyavanae song lyrics – குயவனே குயவனே படைப்பின்
குயவனே, குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கி பார்த்திடுமே
வெறுமையான பாத்திரம் நான்,
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்கச் செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்
இயேசுவை போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே
மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின்பற்றினேன்
கண்டேன் இல்லை இன்பமே
காணாமல் போன பாத்திரம் என்னைத்
தேடி வந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம் பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமே