Maa Dhayavu Christian Song Lyrics

Maa Dhayavu Christian Song Lyrics

Maa Dhayavu Song Lyrics From Tamil Christian Song Sung By. Henley Samuel.

Maa Dhayavu Christian Song Lyrics in Tamil

தலைமுறை தலைமுறையாய்
தாங்கிடும் மாதயவே
தள்ளாடவிடவில்லையே
என்னை தயவாய் நடத்தியதே

தயவு தயவு மாதயவு
பனிப்போல் நெய்யாய் பொழிந்திடுதே
தயவு தயவு மாதயவு
சாம்பலை சிங்காரம் ஆக்கிடுதே

ஆடுகள் பின் அலைந்தேன்
அரசனாய் உயர்த்திட்டதே
சூழ்ச்சியில் வீழ்ந்த என்னை
அரியணையில் அமர்த்தியதே
பிரயாசித்தும் ஒன்றும் இல்லை
உம் வார்த்தையால் பெருகினதே
மழைத்தாழ்ச்சி வருஷத்திலும்
தப்பாமல் கனி ஈந்ததே

தயவு தயவு மாதயவு
பனிப்போல் நெய்யாய் பொழிந்திடுதே
தயவு தயவு மாதயவு
சாம்பலை சிங்காரம் ஆக்கிடுதே

பயத்தினால் பதுங்கிக்கொண்டேன்
பராக்கிரமயாய் எழுப்பியதே
எத்தனாய் துரத்தப்பட்டேன்
இஸ்ரவேலாய் உருமாற்றியதே
தனி மரம் என நின்றேன்
சிலுவை மரம் மாற்றினதே
அழுகையின் பள்ளத்தாக்கை
நகைப்பினால் நிரப்பினதே

தயவு தயவு மாதயவு
பனிப்போல் நெய்யாய் பொழிந்திடுதே
தயவு தயவு மாதயவு
சாம்பலை சிங்காரம் ஆக்கிடுதே


#songsfire

Trip.com WW

Scroll to Top