Skip to content

Naathan vedham Entum – நாதன் வேதம் என்றும்

Naathan vedham Entum – நாதன் வேதம் என்றும்

1. நாதன் வேதம் என்றும்
எங்கள் வழி காட்டும்;
அதை நம்புவோர்க்கும்
மகிழ் ஒளி வீசும்.
2. ஆறுதலின் வேதம்,
மீட்பின் சுவிசேஷம்,
சத்துரு கிட்டும்போதும்
பயம் முற்றும் நீக்கும்.
3. புசல், அலை மோதின்,
மேகம் இருள் மூடின்,
வேதம் ஒளி வீசும்,
க்ஷேம வழி சேர்க்கும்.
4. வாக்குக்கெட்டா இன்பம்,
எண்ணில்லாத செல்வம்,
பேதை மானிடர்க்கும்
தெய்வ வார்த்தை ஈயும்.
5. ஜீவனுள்ளமட்டும்
வேதம் பெலன் தரும்;
சாவு வரும்போதும்
வேதம் ஆற்றித் தேற்றும்.
6. நாதா, உந்தன் வாக்கை
கற்றுணர்ந்து, உம்மை
நேசித்தடியாரும்
என்றும் பற்றச் செய்யும்