Nambikaiyin Devanae – நம்பிக்கையின் தேவனே

Nambikaiyin Devanae – நம்பிக்கையின் தேவனே Tamil Christian Song Jesus Redeems

நம்பிக்கையின் தேவனே
நான் நம்பும் தெய்வமே
என்னில் வாழும் இயேசுவே
உம்மைத்தான் நம்புகிறேன் -2

எந்த நிலைமையிலும்
என் மறுமையிலும்
உம்மையே சார்ந்திருப்பேன் -2

1. நான் தவறும் போதெல்லாம்
தவழும் பிள்ளையென
மன்னித்து தோளில் சுமந்தவரே
உம்மைத்தவிர உம்மைத்தவிர
யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் – எந்த நிலைமையிலும்

2. என் வியாதியின் படுக்கையிலே
என்னைத் தேடி வந்தவரே உம்
தழும்புகளால் சுகம் தந்தவரே
உம்மைத்தவிர உம்மைத்தவிர
யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் – எந்த நிலைமையிலும்

3. நான் கலங்கும் போதெல்லாம்
என் கண்ணீர் துடைத்தவரே
என் பாரங்கள் ஏற்றுக்கொண்டவரே
உம்மைத்தவிர உம்மைத்தவிர
யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் – எந்த நிலைமையிலும்

#nambikaiyindevanae #tamilchristiansong #jesusredeemssongs #newsong2023

Trip.com WW

Scroll to Top