Skip to content

Nandri Bali Umakuthan Appa Tamil Christian song lyrics

Nandri Bali Umakuthan Appa Tamil Christian song lyrics

எண்ணிடாத நன்மைகள் என் வாழ்வில் செய்தவரே
ஏராளும் கிருபை என்மேல்
வைத்துக் காப்பவரே -2

நன்றி பலி உமக்குதானப்பா
நானும் எந்நாளும் செலுத்துவேனப்பா-2 (எண்ணிடாத நன்மைகள்)

1.நான் போகும் வழியெல்லாம்
உம் சமூகம் போகுதப்பா
நான் படுத்து உறங்கினாலும்
உம் கிருபை தாங்குதப்பா-2 (நன்றி பலி)

2.விலையே இல்லாத அன்பு
என்மேல் வைத்தீரே
அளவிட முடியாத
அபிஷேகம் கொடுத்தீரே-2 (நன்றி பலி)

3.பாவத்தில் விழுந்த என்னை
பரிசுத்தமாக்கினீரே
பரலோகம் போவதற்கு
பாதையும் காட்டினீரே-2 (நன்றி பலி)