Nanmaigal seiyya ennai Pirithedutheer lyrics

நன்மைகள் செய்யா என்னை
பிரித்திடும் உம் சேவைக்காய்
எடுத்து என்னை பயன்படுத்தும்
பிரித்தெடுத்தீர், பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – (2)
1) கல்லையும் மண்ணையும் நான்வணங்கி வந்தேன்
நீர் என்னைக் காண்பதை நான் அறியாதிருந்தேன் – (2)
எந்தனின் கோத்திரத்தில் உம்மை யாரும் அறிந்ததில்லை – (2)
இரட்சிப்பை எனக்குத் தந்து, என்னை மட்டும் நீர் பிரித்தீர் – (2)
– பிரித்தெடுத்தீர்
2) தகுதிகள் பாராமல் தெரிந்துகொண்டீர்
எதையும் எதிர்பார்க்காமல் பிரித்தெடுத்தீர் – (2)
அழியா உம் ராஜ்யம் கட்ட எத்தனாய் வாழ்ந்த என்னை – (2)
ஜாதிகளின் மத்தியிலின்று லேவியனாய் நீர் பிரித்தீர் – (2)
– பிரித்தெடுத்தீர்
3) கர்ப்பத்தின் கருவில் நான் உருவாகும் முன்னமே
பெயர் சொல்லி என்னை நீர் பிரித்தெடுத்தீர் – (2)
யாருமே கண்டுகொள்ளாமல் ஆழத்தில் வாழ்ந்திருந்தேன் -(2)
அப்பா உங்க அழகான கண்கள் என்னைப் பிரித்தது – (2)
– பிரித்தெடுத்தீர்

Exit mobile version