
Nee Kurusil Maanda song lyrics – நீ குருசில் மாண்ட
Deal Score0

Nee Kurusil Maanda song lyrics – நீ குருசில் மாண்ட
நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை
அறிக்கை பண்ணவும்
அஞ்சாவண்ணம், உன்நெற்றிமேல்
சிலுவை வரைந்தோம்
கிறிஸ்துவின் மாண்பைக் கூறவே
வெட்காத படிக்கும்
அவரின் நிந்தைக் குறிப்பை
உன்பேரில் தீட்டினோம்
நீ கிறிஸ்துவின் செங்கொடிக்கீழ்
துணிந்து நிற்கவும்
சாமட்டும் நற்போராட்டத்தை
நடத்தும் படிக்கும்
நீ கிறிஸ்து சென்ற பாதையில்
நேராகச் செல்லவும்
நிந்தை எண்ணாமல் சிலுவை
சகித்தீடேறவும்
கிறிஸ்துவின் அடையாளத்தை
சபைமுன்னே பெற்றாய்
நீ அவர் குருசைச் சுமந்ததால்
பொற்கீரிடம் பூணுவாய்