Skip to content

Niraivaana prasannamum நிறைவான பிரசன்னமும்

நிறைவான பிரசன்னமும்
நிலையான உம் கிருபையும்
என்னை மூடும் உம் மகிமையும்
என் வாழ்வில் போதுமைய்யா
நீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் எப்போதுமே
இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர்
தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர்
குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர்
மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர்
காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர்
கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர்