Skip to content

Olinthadhe Ippoovinil song lyrics – ஒழிந்ததே இப்பூவினில்

Olinthadhe Ippoovinil song lyrics – ஒழிந்ததே இப்பூவினில்

ஒழிந்ததே இப்பூவினில்
எவ்வித்தியாசமாம்
செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்
மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில்
மா ஐக்கியம் ஒன்றியே
செய் சேவை சேர்க்கும் மாந்தரை
பொற் கயிற்றாலுமே
வாருமே, கைகோருமே, சபையில்
எம்மனுமக்களே
ஒரே பிதாவை சேவிக்கும்
யாவரும் ஒன்றாமே
சேர்ந்தனரே இப்பூவினில்
பற்பல ஜாதியாம்
மாந்தர் யாரும் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்