பல்லவி
பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே
பாசமாய் ஏற்றுக்கொள் கோனே! – பெருமானே
அனுபல்லவி
ஆதரவானதல்ல – ஆவி தேகமு மெல்லாம்
சரணங்கள்
1. மாதா பிதாவும் முன்னே – மதளைப் பிராயமண்ணல்
பாதம் படைத்து என்னை – பரனுக்கு ஈந்தோமென
செய்த தத்தத்தின் பின்னே – திரும்பவும் ஏழை என்னை – பாதம்
2. அந்தகாரத்தினின்றும் அடிமைத்தனத்தினின்றும்
இன்பங் காட்டியே துன்பம் இயக்கு வஞ்சத்தினின்றும்
சொந்த இரத்தத்தைச் சிந்தி தூக்கி இரட்சித்தா யென்று – பாதம்
3. ஆத்துமா, ஆவி, தேகம், ஐம்புலன், ஆசை, யூகம்
பூர்த்தி, மனம், விவேகம் – பொருள் மனை மக்களகம்,
நேர்த்தி, பெலம், சுகம் – நிகழ் சம்பவங்கள் யாவும் – பாதம்
4. உத்தம சேவை செய்ய – ஊக்கமாய் போர் புரிய
அத்தன் பாதத்தில் பாவ ஆத்துமாக்களைச் சேர்க்க
மத்தியஸ்தனைப் போல மாதிரியாக வாழ – பாதம்
5. அண்ணல் கிறிஸ்தரசே! – அடியேனை மீட்டவரே!
என்ன பாடுபடவும் – என்னை ஒப்புவித்தேனே!
மண்ணில் மயங்காமலே – மறுமைக்குள்ளாகி வைக்க – பாதம்