Paavik kirangaiyanae- பாவிக் கிரங்கையனே

Paavik kirangaiyanae- பாவிக் கிரங்கையனே

பாவிக் கிரங்கையனே
ஆண்டவா மோட்சகதி நாயனே
மீண்டவா பாவிக் கிரங்கையனே
சரணங்கள்
1.நீண்ட ஆயுளுள்ளவா நெறிமறை கொடுத்தவா
தாண்டி உலகில் வந்தாயே தயாளமுள்ள யேசுவே
2.பெத்தலேக மூரிலே பிள்ளையாய்ப் பிறந்தாயே
சித்தம் வைத்திரங்கமாட்டாயோ தேவசீல மைந்தனே?
3.பாவியான மனுஷி உன் பாதமுத்தி செய்திட
ஜீவவாக்குரைக்கவில்லையோ தேற்றல் செய்யும் மீட்பரே?
4.பேதலித்த சீமோனைப் பேணிமுகம் பார்த்தாயே
ஆதரவுநீ தான் அல்லவோ அருமையுள்ள அப்பனே?
5.கொல்கதா மலையிலே குருசினில் தொங்கையிலே
பொல்லாருக்கிரங்கவில்லையோ பொறுமையுள்ள தேவனே?
6.பாவவினை தீர்க்கவே பாடு மிகப் பட்டாயே
கோபமின்றி என்னை நோக்காயோ குருசில் அறையுண்டவா?

Scroll to Top