Skip to content

Pagalon Kathir polumae – பகலோன் கதிர்போலுமே

Pagalon Kathir polumae – பகலோன் கதிர்போலுமே

1. பகலோன் கதிர்போலுமே
இயேசுவின் ராஜரீகமே
பூலோகத்தில் வியாபிக்கும்
நீடுழி காலம் வர்த்திக்கும்.
2. பற்பல ஜாதி தேசத்தார்
அற்புத அன்பைப் போற்றுவார்
பாலரும் இன்ப ஓசையாய்
ஆராதிப்பார் சந்தோஷமாய்.
3. நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே
சிரேஷ்ட பாக்கியம் தங்குமே
துன்புற்றோர் ஆறித் தேறுவார்
திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்.
4. பூலோக மாந்தர் யாவரும்
வானோரின் சேனைத் திரளும்
சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்
”நீர் வாழ்க, ராயரே” என்பார்.