Paiyuril irunthu Poiyurukku vanthu song lyrics – பையூரிலிருந்து பொய்யூரு வந்து
பையூரிலிருந்து பொய்யூரு வந்து குடியிருக்கும் மானிடரே
மெய்யூரு உண்டு தெரியுமா-அது
போக வழி நீ அறிவாயா?
இயேசு இயேசு இயேசு
அந்த மெய் ஊருக்கு வழி இயேசு
1.காலமே இது பொய்யடா
காற்றடைத்த பைய்யடா
நாசி காற்று நின்று போனால்
ஓசி காற்றை எங்கே அடைப்பாய்?
2.மாடி வீடு மறைந்திடுமே
கோடி பணமும் ஓடிடுமே
கூடு விட்டு ஆவி போனால்
கூட ஒன்றும் வந்திடாதே
3.கண்ணில் காணும் காட்சி கண்டு
விண்ணின் தேவனை மறந்திடாதே
வானம் அழியும் பூமி அழியும்
கர்த்தர் வார்த்தை மாறிடாதே
4.இன்று உந்தன் கையில் நாடு
நாளை உன் கையில் திருவோடு
எடுத்து சொன்னால் வெட்க கேடு
இயேசுவையே நோக்கி ஓடு
5.உந்தன் பார்வையை நேராக்கு
உந்தன் பாதையை சீராக்கு
நித்திய ஜீவனை சொந்தமாக்கு
இயேசுவை உந்தன் நேசராக்கு