Skip to content

Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே

Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே

பரத்துக்கேறு முன்னமே
பேரருள் நாதனார்
தேற்றரவாளன் ஆவியை
வாக்களித்தார்
விருந்து போலத் தேற்றவும்
அவ்வாவி சேரவார்
எத்தாழ்மையான நெஞ்சிலும்
சஞ்சரிப்பார்
அமர்ந்த மென்மை சத்தத்தை
போல் நெஞ்சில் பேசுவார்
வீண்பயம் நீக்கிக் குணத்தை
சீராக்குவார்
நற்சிந்தை தூய விருப்பம்
தீயோன் மேல் வெற்றியும்
எல்லாம் அவரால் மாத்திரம்
உண்டாகி விடும்
ஆ நேச தூய ஆவியே
உம் பெலன் ஈந்திடும்
சுத்தாங்கம் ஈந்து
நெஞ்சிலே நீர் தங்கிடும்