பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார் – Parisuththar Yesu Uyirthelunthar

பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார் – Parisuththar Yesu Uyirthelunthar

பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
புகழ் செலுத்தி மகிழ்வோம்
அன்றதி காலை மூன்றாம் நாளில்
சொன்னபடி எழுந்தார்

  1. சடுதி பூமி அதிர்ந்ததே சரீரம் வைத்த
    கல்லறை அற்புதமாகத் திறந்திடவே
    ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
    தேவனின் வல்ல செயலிதுவே
    தேவனால் கூடாததொன்றில்லை
    கலங்கிடாமல் நம்பிடுவோம்
    கைவிடமாட்டார் கடைசி வரை
  2. அழிவைக் காணார் பரிசுத்தர்
    அகல பாதாளம் வென்றார்’
    பூமியிலே தாழ்விடங்களிலே
    புண்ணியர் இயேசு இறங்கினாரே
    சிறைப்பட்டவரை சிறையாக்கி
    சிறந்த வரங்கள் அளித்தாரே
    வானாதி வானம் ஏறினாரே
    வலது பாரிசம் வீற்றிடவே
  3. புதிய ஜீவ மார்க்கமாய் பரம தேவ சந்நிதி
    பரிந்து பேச எமக்காக
    பூரண மீட்பை நாம் அடைய
    மெல்கிசேதேக்கின் முறைப்படியே
    மா பரிசுத்த ஸ்தலமதிலே -மகா பிரதான
    ஆசாரியர் மன்னன் கிறிஸ்து பிரவேசித்தார்
  4. பரிசுத்தாவி பெலத்தினால் மரித்தவர் எழுந்தாரே
    சரீரமாம் தம் திருச்சபை மேல்
    சத்திய ஆவி பொழிந்தனரே
    ஆவியாய் தேவன் இறங்கிடவே
    ஆவியால் தேகம் நிரம்பிடுதே
    அகமதில் உலாவுகின்றார்
    ஆனந்த பாக்கியம் அடைகிறோமே
  5. பரம சீயோன் சேருவோம்
    மரணமோ நம் ஜீவனோ
    கடைசி நேரம் ரம் கேட்டிடுவோம்
    எக்காள சத்தம் முழங்கிடுமே
    கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்
    கல்லறை திறக்க எழும்பிடவே
    மறுரூபம் கண்ணிமைப் பொழுதே
    மகிமை அடைந்து பறந்து செல்வோம்

Sis. சாராள் நவரோஜி

Scroll to Top