Penthekosthin Aaviyae – பெந்தகொஸ்தின் ஆவியே

Penthekosthin Aaviyae – பெந்தகொஸ்தின் ஆவியே

1.பெந்தகொஸ்தின் ஆவியே
உம்மால் போதிக்கப்பட்டே
கேட்போம் உன்னத ஈவே
தூய மெய்யன்பே.
2.அன்பு யாவும் சகிக்கும்
தீதெண்ணாது சாந்தமும்
அதுவெல்லும் சாவையும்
அன்பை ஈயுமேன்.
3.போதனையும் ஓய்ந்திடும்
பூரண அறிவிலும்
அன்பே என்றும் நிலைக்கும்
அன்பே ஈயுமேன்
4.காட்சியால் விஸ்வாசமும்
பூரிப்பால் நம்பிக்கையும்
ஓயும்! என்றும் ஒளிரும்
ஆன்பே ஈயுமேன்.
5.அன்பு விசுவாசமும்
நம்பிக்கை இம்மூன்றிலுமு;
ஒப்பற்ற மேலானதும்
அன்பே ஈயுமேன்
6.தூய நேச ஆவியே
உம்மைப்போற்றும் தாசர்க்கே
எங்கள் பேரில் அமர்ந்தே
அன்பே ஈயுமேன்.

Scroll to Top