Purapattan Christian Song Lyrics

Purapattan Christian Song Lyrics

Purapattan Song Lyrics in Tamil and English Sung By. Rathna Mani.

Purapattan Christian Song Lyrics in Tamil

புறப்பட்டான் ஒருவன் புறப்பட்டான்
விதை விதைக்க ஒருவன் புறப்பட்டான் (2)

விதைகையில் அவன் விதைகையில்
வழி அருகே விழுந்தது சில விதைகள் (2)
வந்தது ஆகாயத்துப் பறவைகள்
வழியருகே விதைகளைத் தின்றது (2)

சில விதைகள் அதிக மண்ணில்லாத
கற்பாறை நிலங்களில் விழுந்தது (2)
வெயிலின் தாக்கம் தாங்காமல்
வேர் இல்லாமல் உலர்ந்து போனது (2)

சில விதைகள் முள்ளுள்ள இடங்களில்
விழுந்தது முள் வளர்ந்தது (2)
அது பலன் ஒன்றும் கொடுக்காமல்
அந்த விதைகளை நெருக்கி போட்டது (2)

சில விதைகள் விழுந்தது நல்ல நிலத்தில்
ஓங்கி வளரும் பயிராக வளர்ந்தது (2)
ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும்
ஒன்று நூறு மாக பலன் தந்தது (2)

புறப்பட்டான் ஒருவன் புறப்பட்டான்
விதை விதைக்க ஒருவன் புறப்பட்டான்

உன் வசனத்தை விதைக்கும் பிள்ளைகளாய்
எங்களை நீர் மாற்றிடும் (2)
நூறு மடங்கு ஆத்துமா அறுவடை
தந்திடும் நீர் தந்திடும் (2)


#songsfire

Trip.com WW

Scroll to Top