பல்லவி
இரத்தஞ் சிந்தி நம்மை அவர்
முத்தி சேர்க்கப் பிறந்தார்
அனுபல்லவி
நித்தம் அவரோடு வாழ சத்ய வழி திறந்தார்
கர்த்தரே தம் பக்தர் பாவம் மறந்தார்
சரணங்கள்
1. மோசத்துக்குள்ளான என்னை
இயேசு சுவாமி பார்த்தார்;
நாசத்திருந்தோடி வந்த,
நீசனையே சேர்த்தார்,
நேச மீட்பர் பாசமாகக் காத்தார் – இரத்தம்
2. கெஞ்சி வந்த பாவிகட்காய்
தஞ்சமாய் நின்றார்;
மிஞ்சி மோசஞ் செய்யும் அந்த
வஞ்சப் பேயைக் கொன்றார்
கொஞ்சமுமே அஞ்சிடாமல் வென்றார்! – இரத்தம்
3. பொன்னுலகத் தின்பங்களை
என்னுள்ளத்தில் தந்தார்;
தன்னுடன் நற்பங்கு பெற
மன்னர் என்மேல் உவந்தார்;
சின்னப்பட இந்நிலத்தில் வந்தார் – இரத்தம்
4. துன்பம் வரும் வேளையினில்
இன்பமே கொண்டாடுவோம்;
தம்பிரானும் எம்மேல் வைத்த
அன்பின் நேசம் பாடுவோம்;
அம்பரத்தில் நண்பருடன் கூடுவோம்! – இரத்தம்