Sirappu Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

Sirappu Christian Song Lyrics

Sirappu Song Lyrics in Tamil and English From The Album Aayathamaa Vol 7 Sung By. Ravi Bharath.

Sirappu Christian Song Lyrics in Tamil

வணக்கம் சொல்கிறேன்
வந்தனம் செய்கிறேன்
நீர் செய்த செயல்கள் எல்லாம்
சிறப்பு என்கிறேன் (2)

சிறப்பு சொல்லும் சிறப்பு
சிறப்பு செயலும் சிறப்பு (2)

1. வார்த்தையினாலே வானம் பூமி
வந்ததும் சிறப்பு
உம் சுவாசத்தினாலே செங்கடல்
இரண்டாய் சென்றதும் சிறப்பு
கட்டளையிட்டதும் காற்றும் மழையும்
கேட்குதே சிறப்பு (2)
கர்த்தரை கண்டதும் கடல் பின் சென்றதும்
அதுதான் சிறப்பு

2. தூரத்தில் இருந்த மானிடரை
நீர் கண்டதும் சிறப்பு
அந்தகாரத்தில் இருந்த எங்களை
அன்பால் வென்றதும் சிறப்பு
உத்தம ஆவியை முத்திரையாக
தந்ததே சிறப்பு (2)
சத்திய வேதம் துணையாய் எம்முடன்
வந்ததே சிறப்பு

3. சீக்கிரமாய் நீர் மீண்டும் வருவீர்
என்பதும் சிறப்பு
எமை பத்திரமாய் பரலோகில் சேர்ப்பீர்
என்பதும் சிறப்பு
நித்திய நித்தியமாய்
உம்மோடு வாழ்வதே சிறப்பு (2)
இத்தனையும் உம் திட்டம் தானே
அதுதான் சிறப்பு


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo