Sthotharipaen Devaney ஸ்தோத்தரிப்பேன் தேவனை

ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும்
உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் – (2)
1) என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
என்னை உருவாக்கினவரை ஸ்தோத்தரிப்பேன் – (2)
களிமண்ணை எடுத்து பாத்திரமாக
என்னையும் வனைந்து உருவாக்கினீர்
நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி
என்னையும் உமக்காய் படைத்தீரே
உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்
2) அன்புள்ளவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
நல்லவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – (2)
மனிதர்கள் என்னை கைவிட்டபொழுது
கைவிடா கர்த்தர் என்று அறிந்தேனே
மாயையான அன்பில் மயங்கி நான் போனேன்
உந்தன் அன்பினால் சேர்த்துக் கொண்டீரே
உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்
3) அற்புதமே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
அதிசயமே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
உம் திரு வார்த்தையை எனக்கு தந்து
அதிசயமாய் தினம் நடத்துகிறீர்
சோர்ந்து போன நேரத்தில் சுகம் பெலன் தந்து
அற்புதமாய் என்னை காத்துக் கொண்டீரே
உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்

 
sthotharipaen devanai endreyendrum
undhan namam magimai sayluthi paaduvaen
ennai padaithavarey ummai sthotharipaen
ennai uruvaakinavarai sthotharipaen
kalimanai yeduthu paathiramaga
ennaium vanaindhu uruvaakineer
naasiyel jeeva suvasathai oothi
ennaium umakaai padaitheray
ummai sthotharipaen- sthotharipaen
anubullavarey ummai sthotharipaen
nallavarey ummai sthotharipaen
manithargal ennai kaivittapoluthu
kaividaa karthar endru arintheynay
maayeiyana anbiel mayangi naan ponean
undhan anibinal sayirthukondirey
ummai sthotharipaen- sthotharipaen
arputhamay ummai sthotharipaen
adisayamay ummai sthotharipaen
um thiru vaarthaiyei ennaku thandhu
adisayamai dhinam nadathukireer
sorndupona neyrathil sugam belan thanthu
aruputhamaai ennai kaathukondiray
ummai sthotharipaen- sthotharipaen
#Vallavar #BerylNatasha #Joevin

Exit mobile version