Thaagam Theerkkum Jeevanathi lyrics

தாகம் தீர்க்கும் ஜீவநதி
தரணியில் உண்டோ எனத் தேடினேன்
தேடினேன் தேடியே ஓடினேன்
1.அருவியின் நீரை பருகி விட்டேன்
ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்(2)
துரவுகள் கடலும் தாகம்தீர்க்கவில்லை
தூரத்துக் கானலாய் ஆகியதே (2)
2.கானகம் சோலையும் தேடியபின் வானகம்
நோக்கியே அபயமிட்டேன் கண்களை
மெல்ல நானும் திறந்திட கன்மலை
ஒன்று தோன்றக் கண்டேன்(2)
3.பருகினேன் வாழ்த்தினேன் தாகமில்லை
அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை
காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க
கன்மலையாம் என் இயேசு நின்றார்
4.ஐயனின் திருவடி வீழ்ந்தேன்
நான் ஆன்மாவின் தாகம் தீர்க்க சென்றேன்
புன்னகை பூத்து புனிதனும் மறைய
புதுபெலன் அடைந்தேன்என் உள்ளத்திலே
5.மதகுபோல் ஐந்தில் நீர் சுரக்க
மகிழ்வுடன் பருகினேன் தாகமில்லை
என் ஆத்ம தாகம் ர்த்திட்ட கன்மலை
என் நேசரேசுவை வாழ்த்துகிறேன்(2)
தாகம் தீர்க்கும் ஜீவநதி
இயேசுவே என்று கண்டுகொண்டேன்

Scroll to Top