1. தாரும் தேவா உந்தன்
பூரண இரட்சிப்பு
காரும் என் ஆத்மா தேகமும்
மாறாது சுத்தமாய்
பல்லவி
தூய ஆடை நான் தரித்து
நேயரோடுலாவுதற்கு
ஆக்கு தவர் இரத்தம்
2. பூரண இரட்சிப்பின்
தீரம் எனக்கீயும்
தீங் ககற்றி நன்மை செய்ய
தாங்கிடும் வல்லவா!
3. அன்பு சமாதானம்
உன்னத ஆறுதல்
கல்வாரி ஜீவன் ஆவியும்
என் பங்காகச் செய்யும்!
4. முற்றாய்ப் பாவம் விட்டு
வற்றா கிருபை கொண்டு
புறம் அகம் யாவும் உம்மைப் போல்
கறை யற்றிருப்பேன்!