Thanimayil Sheryl Anusha Latest worship song

தனிமையில் நான் வாடினேன்
என் நண்பனாய் இருந்தீர்
நெருக்கத்தில் உம்மை அழைத்தேன்
நீர் நெருங்கி வந்தணைத்தீர்-2
என் இயேசுவே என் மணவாளரே நீர் போதுமே
என் நேசரே என் மணவாளரே நீர் போதுமே
பாவம் என்னை சூழ்ந்தது
இருள் என்னை மூடிற்று
உம் ஆணி பாய்ந்த கரங்கள்
என்னை விடுவித்தது-2
பரிசுத்தரே பரிகாரியே நீர் போதுமே-2
உம் வேதம் எந்தன் ஆத்மாவை
தேற்றி உயிர்ப்பித்ததே
உம் வார்த்தை எந்தன் வாழ்க்கையை
மேன்மையாக்கினதே-2
தூயவரே என் துணையாளரே நீர் போதுமே-2-தனிமையில்

Scroll to Top