Skip to content

Thanthayin Pirakasamaaki song lyrics – தந்தையின் பிரகாசமாகி

Thanthayin Pirakasamaaki song lyrics – தந்தையின் பிரகாசமாகி

1. தந்தையின் பிரகாசமாகி
பக்தர் ஜீவனானோரே
விண்ணோரோடு மண்ணோர் சேர்ந்து
உம்மைத் துதி செய்வாரே.
2. கோடாகோடித் தூதர் கூட்டம்
யுத்த வீர சேனைதான்
வெற்றிக் குருசை கையில் தாங்கி
தூய மிகாவேல் நிற்பான்.
3. பட்டயத்தை ஓங்கி துரோக
சேனை விண்ணின்றோட்டுவான்
தெய்வ சத்துவத்தால் வலு
சர்ப்பத்தையும் மிதிப்பான்.
4. தீய சேனை அஞ்சி ஓட
நாங்கள் மோட்சம் சேரவும்
எங்கள் போரில் விண்ணோர் துணை
கிறிஸ்துவே கடாட்சியும்.
5. மா பிதாவாம் நித்திய ஜீவா
மாண்டுயிர்த்த மைந்தனே
தூய ஆவியே எந்நாளும்
ஸ்தோத்திரம் என்றும் உமக்கே.