
Tharparaa Thayaaparaa Nin – தற்பரா தயாபரா நின்

Tharparaa Thayaaparaa Nin – தற்பரா தயாபரா நின்
1. தற்பரா தயாபரா நின்
தக்ஷணை கைப்பற்றினோம்
பொற்பரா, நினைப் புகழ்ந்து
போற்றினோம் பொன் நாமமே
அற்புதம், அடைக்கலம் நீ
ஆதரித்தனுப்புவாய்.
2. நாவினால் நமஸ்கரித்து,
நாதா நினைப் பாடினோம்
பாவியான பாதகரைப்
பார்த்திபா கடாக்ஷித்தே
ஆவியால் நிரப்பி எம்மை
ஆசீர்வதித்தருள்வாய்.
3. நின் சரீரத்தால் எம் மாம்சம்
நீதியாக்கப் பெற்றதே
மன்னவா, எம்மாசும் நீக்கி
மாட்சி முகம் காட்டுவை
கன்னலன்ன அன்பின் ஆசி
கர்த்தனே, விளம்புவாய்.
4. தந்தை முகம் என்றும் காணும்
மைந்தன் இயேசு நாதனே,
மந்தையாயெமை மதித்த
மாசில் மணி மேசியா
விந்தை முகம் காட்டினை நீ
வீழ்ந்துனைப் பணிவோமே.