Thothiram Sthothiramae – தோத்திரம் ஸ்தோத்திரமே

Thothiram Sthothiramae – தோத்திரம் ஸ்தோத்திரமே

1. தோத்திரம் ஸ்தோத்திரமே
இயேசு சுவாமிக்கு ஸ்தோத்திரமே
தோஷி எனை இரட்சித்த
பரிசுத்தர்க்கு ஸ்தோத்திரமே
2. கோடா கோடித் தூதர்கள்
சபை கூடியே ஆர்ப்பரித்து
பாடி உம்மைத் துதிக்க
நாடி நானும் உம்மைத் துதிப்பேன்
3. சின்னஞ் சிறுவர் கூடி,
இயேசு மன்னவனையே தேடி
உன்னித் துதித்திடவே
உம்மை யானும் துதித்திடுவேன்
4. பரிசுத்தவான்கள் சங்கம்
எங்கள் பார்த்திபன் இயேசுவையே
பாடித் துதித்திடவே
பாவி நானும் துதித்திடுவேன்
5. மூப்பர்கள் சுற்றி நின்று
எங்கள் முன்னவன் இயேசுவையே
ஆர்ப்பரித்துத் துதிக்க
அடியேனும் துதித்திடுவேன்

Scroll to Top