Ullam Urugudhaiya Song Lyrics

Ullam Urugudhaiya Song Lyrics

Ullam Urugudhaiya Song Lyrics From Tamil Christian Song Sung By. Daniel Jawahar.

Ullam Urugudhaiya Christian Song Lyrics in Tamil

உள்ளம் உருகுதையா
என் நெஞ்சம் மகிழுதையா
என் தேவன் என்னோடு – நான்
எந்நாளும் அவரோடு

1. நொறுக்கப்பட்டாலும் இயேசுவின் அன்பு என்றும் மாறாது
நெருக்கப்பட்டாலும் நேசரின் நிழலோ நீங்கிப் போகாது
உடைக்கப்பட்டாலும் உன்னத ஆவி விலகிப் போகாது

2. கசக்கப்பட்டாலும் கர்த்தரோ என்னை தூக்கி சுமப்பாரே
கலங்கும் நேரம் கல்வாரி அன்பு கரைந்து போகாதே
வெறுக்கப்பட்டாலும் வல்லமை தேவன் வல்லமை ஊற்றிடுவார்

3. தாயின் அன்பு தேற்றுவதைப் போல் தேவன் தேற்றுகின்றார்
உள்ளங்கையில் என்னை வரைந்து மறைத்து நடத்துகின்றார்
ஒருபோதும் என்னை கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார்

4. தாழ்த்தப்பட்டாலும் தேவனின் தயவு உயர்த்தி நிறுத்திவிடும்
தள்ளப்பட்டாலும் மாறாத தேவன் மகிமைப்படுத்திடுவார்
பெலவீன நேரம் கர்த்தரின் கிருபை பூரணமாய் பெருகும்


#songsfire

Trip.com WW

Scroll to Top