Skip to content

Unnatharae neer Magimai song lyrics – உன்னதரே நீர் மகிமை

Unnatharae neer Magimai song lyrics – உன்னதரே நீர் மகிமை

1.உன்னதரே நீர் மகிமை,
இந்நிலம் சமாதானத்தை
அடைய அன்பு ஓங்க
பராபரனார் கர்த்தாவே
பரம ராஜா பர்த்தாவே
வல்லமை தந்தாய், வாழ்க!
தாழ்ந்து வீழ்ந்து,
போற்றுவோமே புகழ்வோமே
தொழுவோமே
மாட்சி மேன்மைக்கென்றும் ஸ்தோத்ரம்.
2.பிதாவின் ஒரே மைந்தனே,
சுதாவே கர்த்தா ராஜரே,
தெய்வாட்டுக்குட்டி நீரே
பார் மாந்தர் பாவம் போக்கிடும்
மா தந்தை பக்கல் ஆண்டிடும்
மகத்துவ கிறிஸ்து நீரே;
கேட்பீர் ஏற்பீர்
ஏழை நீசர் எங்கள் ஜேபம்
தாழ்வாம் வேண்டல்
இரங்குவீர் தயவோடே.
3. நீர் தூயர் தூயர் தூயரே,
நீர் கத்தர் கர்த்தர் கர்த்தரே
என்றென்றும் ஆள்வீர் நீரே
பிதாவின் ஆசனத்திலே
மேதையாய் வீற்றுப் பாங்கினில்
கர்த்தாவாம் ஆவியோடே
இன்றும் என்றும்
ஏக மாண்பு ஏக மாட்சி
ஏக மேன்மை
தாங்கி ஆள்வீர் தேவரீரே