Unthan Sonthamaakkineer song lyrics – உந்தன் சொந்தமாக்கினீர்

Unthan Sonthamaakkineer song lyrics – உந்தன் சொந்தமாக்கினீர்

1. உந்தன் சொந்தமாக்கினீர்
அடியேனை நோக்குவீர்
பாதுகாரும் இயேசுவே
என்றும் தீங்கில்லாமலே
2. நான் உம் சொந்தம், லோகத்தில்
மோட்ச யாத்திரை செய்கையில்
ஜீவன், சத்தியம், வழியும்
நீரே, ரட்சித்தாண்டிடும்
3. நான் உம் சொந்தம் ரட்சியும்
மட்டில்லாத பாக்கியமும்
அருள் நாதா, நல்கினீர்
இன்னமும் காப்பாற்றுவீர்.
4. நான் உம் சொந்தம் நித்தமாய்
தாசனை நீர் சுகமாய்
தங்கச் செய்து, மேய்ப்பரே
காத்தும் மேய்த்தும் வாருமே.
5. நான் உம் சொந்தம், தேவரீர்
வழி காட்டிப் போஷிப்பீர்
பாவம் நீங்கக் கழுவும்
ஆயுள் முற்றும் நடத்தும்.

Scroll to Top