UYIRPIYUM DEVA Tamil christian songs lyrics

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை
உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும்

உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும்
உருமாற்றி என்னை உருவாக்கிடும்

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை…

கனியற்று போன என் வாழ்வினை பாரும்
சுத்தம் செய்து உம்மில் நிலைத்திட செய்யும்- 2

ஆவியின் கனிகள் என்னிலே தந்து – 2

உம்மை போல் என்னை மாற்றிடும் நாதா

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை ….

பெலனற்ற என்னை உம் ஆவியால் நிரப்பும்
கழுகு போல் பெலத்தால் இடைக்கட்டிடும் – 2

புது பெலன் தந்து எழும்பிடச் செய்யும் – 2

உந்தன் சாட்சியாய் வாழ்ந்திட உதவும்

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை
உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும்

உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும்
உருமாற்றி என்னை உருவாக்கிடும்

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை…

Exit mobile version