Vaanaathi Vaanavar piranthar song lyrics – வானாதி வானவர் பிறந்தார்

Deal Score0
Deal Score0
Vaanaathi Vaanavar piranthar song lyrics – வானாதி வானவர் பிறந்தார்

Vaanaathi Vaanavar piranthar song lyrics – வானாதி வானவர் பிறந்தார்

வானாதி வானவர்
வான் புவி போற்றும்
இயேசு பிறந்தாரே
விண்ணகம் விட்டு அதிசயமாக
மண்ணில் உதித்தாரே

பிறந்தாரே நமக்காய் இயேசு பிறந்தாரே
உதித்தாரே தெய்வம் மனுவாய்
உதித்தாரே
கொண்டாட்டமே உலகெங்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டமே
ஆனந்தமே வாழ்வில் ஆனந்தமே

Happy Christmas
Merry Christmas
இயேசு பிறந்தாரே
Happy Christmas
Merry Christmas
இயேசு உதித்தாரே
Happy Christmas
Merry Christmas
இயேசு பிறந்தாரே
Happy Christmas
Merry Christmas
தெய்வம் உதித்தாரே

ஆதியில் இருந்தவரே அநாதி ஆண்டவரே
முந்தினவர் அவரே
முடிவில்லாதவரே
சகலமும் அவர் மூலமாய்
அவரால் உண்டானதே
சர்வத்தையும் ஆளும்
ஆதாரம் அவர்தானே

அடைக்கலப் பட்டணமாய்
நித்திய புகலிடமாய்
அழிவுக்கு விலக்கி நம்மை
காத்திடவே வந்தார்
நம்முடைய ஜீவன்
அவரில் நிலைத்திருக்க
ஜீவனின் ஒளியாக
அவரே இறங்கி வந்தார்

நீதியின் வேரானவர்
தம்மோடு இணைத்துக்கொள்ள
பரிசுத்த வித்தாக
பாசமாய் தேடி வந்தார்
பரிசுத்த ஜனமாக
நம்மை மாற்றிக்கொள்ள
பரலோகம் துறந்து
பாரினில் அவதரித்தார்

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    songsfire
        SongsFire
        Logo