
Vaarum BethlehemVaarum – வாரும் பெத்லகேம் வாரும் வாரு

Vaarum BethlehemVaarum – வாரும் பெத்லகேம் வாரும் வாரு
1.வாரும் பெத்லகேம் வாரும் வாரும்
வரிசையுடனே வாரும்
வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை
வாரும் விரைந்து வாரும்
2.எட்டி நடந்து வாரும் அதோ
ஏறிட்டு நீர் பாரும்
பட்டணம்போல் சிறு பெத்லகேம் தெரியுது
பாரும் மகிழ்ந்து பாரும்
3.ஆதியிலத மேவை அந்நாள்
அருந்திய பாவவினை
ஆ திரிதத்துவ தே வன் மனிதத்துவ
மாயினார் இது புதுமை
4.விண்ணுலகாதிபதி தீர்க்கர்
விளம்பின சொற்படிக்கு
மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்
மானிடனா யுதித்தார்
5.சொல்லுதற் கரிதாமே ஜோதி
சுந்தர சோபனமே
புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி
பூபதிதான் பிறந்தார்
6.மந்தை மாடடையில் மாது
மரியவள் மடியதனில்
கந்தைத் துணியதை விந்தைத் திருமகன்
காரணமாய் அணிந்தார்
7.தூதர் பறந்துவந்து தேவ
துந்துமி மகிழ்பாட
மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து
மங்களமொடு நாட