Vaazh naal Yellam Pothathu song lyrics – வாழ்நாளெல்லாம் போதாது
வாழ்நாளெல்லாம் போதாது
உமக்கு நன்றி சொல்ல
இந்த ஜீவனும் போதாது
உம்மையே நான் துதிக்க
நன்றி நன்றி சொல்கிறேன்
உம்மையே துதிக்கிறேன் (2)
தாழ்வில் என்னை நினைத்தவர் நீரே
ஏழை என்னை சந்தித்தீர்
கண்ணீரெல்லாம் துடைத்தீரே
களிப்பாக மாற்றிவிட்டீர்
எனக்காக உம் ஜீவன் தந்தீரே
என் பாவமெல்லாம் மன்னித்தீர்
நீரே என்றென்றும் என் தெய்வம்
நன்றியோடும்மை சேவிப்பேன்