
Vaikarai Irukaiyil – வைகறை இருக்கையில்
Deal Score0

Vaikarai Irukaiyil – வைகறை இருக்கையில்
1.வைகறை இருக்கையில்
ஓடி வந்த மரியாள்
கல்லறையின் அருகில்
கண்ணீர் விட்டு அழுதாள்
என்தன் நாதர் எங்கேயோ
அவர் தேகம் இல்லையே
கொண்டுபோனவர் யாரோ
என்று ஏங்கி நின்றாள்
2. இவ்வாறேங்கி நிற்கையில்
இயேசு மரியாள் என்றார்
துக்கம் கொண்டாட நெஞ்சத்தில்
பூரிப்பை உண்டாக்கினார்
தெய்வ வாக்கு ஜீவனாம்
தெய்வ நேசம் மோட்சமே
தூய சிந்தையோர் எல்லாம்
காட்சி பெற்று வாழவே